
புத்ரா ஜெயா, ஆக 31 – நாட்டின் 66ஆவது தேசிய தினம் இன்று காலையில் பு த்ராஜெயா சதுக்கத்தில் மிகவும் கோலாலலமாக நடைபெற்றது. மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான், பேரரசியார் Tungku Azizan Aminah , பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , அவரது துணைவியார் டாக்டர் வான் அஸிஸா, அமைச்சரவை உறுப்பினர்கள், வெளிநாடுகளின் தூதர்கள் , அழைக்கப்பட்ட பிரமுகர்கள் உட்பட ஆயிரக் கணக்கான பொதுமக்களும் இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கல்வி அமைச்சைச் சேர்ந்த 1,500 மாணவர்கள் தேசிய தின கருப்பொருளைக் கொண்ட பாடலை பாடியதைத் தொடர்ந்து தேசிய தின கொண்டாட்டம் தொடங்கியது.
இம்முறை 17,000 பேர் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர். மலேசிய ராணுவப் படை மற்றும் போலீஸ் படை 516 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாகச காட்சிகளும் இடம்பெற்றன, 2003ஆம் ஆண்டு முதல் முறையாக புத்ரா ஜெயாவில் தேசிய தின கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் பின் 5ஆவது முறையாக இந்த ஆண்டும் அங்கு தேசிய தின கொண்டாட்டம் நடைபெற்றறது.