Latestமலேசியா

புத்ரா ஹைய்ட்ஸ் தீ விபத்து; மாற்று தொடர்பு சாதனங்களுக்கான கோரிக்கைக் குறித்து இலக்கியவில் அமைச்சு பரிசீலிக்கிறது

பூச்சோங், ஏப்ரல்-4- பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸில் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான தொடர்பு சாதனங்களை வழங்கும் சரியான வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதனைத் தெரிவித்தார்.தீயில் அழிந்துபோன மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகளுக்கு மாற்று சாதனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் சுமையைக் குறைக்க முடியும்.

தற்போது மதிப்பாய்வு நடப்பதாகக் குறிப்பிட்ட கோபிந்த், விரைவிலேயே அமைச்சின் கலந்தாய்வுக்கு அது கொண்டுச் செல்லப்படுமென்றார்.

இன்று அப்பகுதிக்கு நேரில் வருகைப் புரிந்து நிலவரங்களைப் பார்வையிட்ட போது, ஏராளமான மக்கள், தங்களின் தொடர்புசாதனங்கள் சேதமடைந்திருப்பதாக முறையிட்டனர்.

எனவே, அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பது குறித்து நாம் பரிசீலித்து வருகிறோம்; விரைவிலேயே அறிவிப்பு வெளியாகுமென கோபிந்த் சொன்னார்.

அதே சமயம், மாற்று தகவல் தொடர்பு சாதனங்கள் தேவைப்படுவோர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களின் உதவியையும் நாடலாம் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!