
பூச்சோங், ஏப்ரல்-4- பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, TNB நிறுவனம் 1 மாத மின்சாரக் கட்டண தள்ளுபடியை அறிவித்துள்ளது.
1 மாதத்திற்கான இந்த 100 விழுக்காடு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி one off அதாவது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் கருத்தில் கொண்டு இச்சலுகை வழங்கப்படுவதாக, TNB வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
மார்ச் மாத மின்சாரக் கட்டணத்திற்கான இந்த கட்டண தள்ளுபடி சலுகை, ஏப்ரல் மாத கட்டண அறிக்கையில் பிரதிபலிக்கும். இவ்வேளையில், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வேறு சில உதவிகளையும் அந்த தேசிய மின்சார விநியோக நிறுவனம் அறிவித்துள்ளது.
மின்சார மறு விநியோகத்திற்கான விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் கிடையாது; நடப்பு கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்தினால் அபராதக் கட்டணம் இல்லை ஆகியவையும் அவற்றிலடங்கும்.
அதே சமயம், பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் இணைப்புகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய, அதிகாரத் தரப்பு மற்றும் குத்தகையாளருடன் TNB தொடர்புகொள்ளும்.