Latestமலேசியா

புயலின்போது கார்கள் மீது மரம் விழுந்தது அறுவர் உயிர் தப்பினர்

கோலாலம்பூர், ஏப் 30 – அம்பாங்கிற்கு செல்லும் MRRR 2 நுழைவுப் பகுதிக்கு அருகே கடுமையான புயலின்போது தங்களது கார்கள் மீது மரம் விழுந்ததில் அதில் இருந்த அறுவர் உயிர் தப்பினர். Perodua Alza. Perodua Myvi மற்றும் Produa Exora ஆகிய மூன்று கார்களைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள் மற்றும் மூன்று பெண்கள் இந்த சம்பவத்தில் உயிர் தப்பினர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு Sungai Besi தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் சிக்கிக் கொண்ட அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு படை வீரர்களுடன், சிவில் தற்காப்பு படை மற்றும் கோலாலம்பூர் மாநாகர் மன்றத்தின் பணியாளர்கள் கீழே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!