அலோர் ஸ்டார், செப்டம்பர் -17, குவாலா பெர்லிஸிலிருந்து கெடா, லங்காவிக்கு செல்லும் வழியில் புயல் காரணமாக மணல் திட்டில் தரைத்தட்டிய ஃபெரி படகு, நேற்றிரவு 10.40 மணிக்கு லங்காவி சென்றடைந்தது.
அதிலிருந்த 576 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக, Konsortium Ferrylines Ventures Sdn Bhd நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Kapten Baharin Baharom தெரிவித்தார்.
குவாலா பெர்லிஸ் முனையத்திலிருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்ட அந்த ஃபெரி படகு, புயல் மழையால் 0.5 கடல் மைல் தொலைவில் தரைத்தட்டியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மொத்தமாக 610 பேருடன் குவாலா கெடாவிலிருந்து லங்காவி புறப்பட்ட 3 ஃபெரிகள், பெரிய அலைகள் மற்றும் புயல் காற்றினால் மீண்டும் குவாலா கெடா முனையத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று.
பயணிகளின் பாதுகாப்புக் கருதி அவை மூன்றும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பின.