Latestஉலகம்

புரூணையில் அஸ்ட்ரோ ஒளிபரப்பு 21 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுத்தப்படுகிறது

பண்டான் ஶ்ரீ பெகாவான், பிப் 2 – புரூணையில் செயல்பட்டு வந்த அஸ்ட்ரோவின் துணை நிறுவனமான கிரிஸ்டல் ஆஸ்ட்ரோ கட்டண ஒளிபரப்பு நிறுவனம், 21 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் நிரந்தரமாக அதன் சேவையை நிறுத்திக் கொள்ளவிருக்கிறது.

நவீன வளர்ச்சியில் மக்கள் இணையம் வாயிலான இலக்கவியல் ஒளிபரப்பு சேவைக்கு மாறியிருப்பதை அடுத்து, அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அதன் அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்நாட்டில் அஸ்ரோ கட்டண சேவை இவ்வாண்டு ஏப்ரலுடன் முடிவுக்கு வருகிறது.

இவ்வேளையில், மலேசிய ஆஸ்ட்ரோ ஒளிபரப்பு நிறுவனம் தற்கால வளர்ச்சிக்கு ஏற்ப துணைக்கோள சமிக்ஞ்சையை நம்பியிருக்காமல், இணையத்தின் மூலமாகவும் அதன் சேவையை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!