
கோலாலம்பூர் , செப் 14 – புரோட்டான் X 90 தீப்பிடிப்பதைச் சித்தரிக்கும் சமீபத்திய வைரல் வீடியோவுக்குப் பதிலளிக்கும் விதமாக, மலேசியாவின் தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் , சாத்தியமான தரை இணைப்பு சிக்கல்களைத் தீர்க்க வாகன பாதுகாப்பு ஆய்வுக்கு அந்த காரின் உரிமையாளர்களை அழைத்துள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணையை நடத்திய பிறகு, வாகனத்தின் உடல் அமைப்புடன் தரையிறங்கும் இணைப்புத்தான் தீப்பிடிக்கும் வாய்ப்புக்கான முதன்மைக் காரணம் என்று புரோட்டோன் அடையாளம் கண்டுள்ளது.
“வாகனத்தின் உடல் அமைப்புடன் தரையிறங்கும் இணைப்பு தொடர்பாக ஒரு சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு தொடர்ச்சியான பெரிய மின்னோட்டத்தைக் கொண்டிருப்பதால் அதன் வழியாக செல்லும் போது இணைக்கும் பகுதியில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தலாம் மற்றும் ஒலியை எழுப்பும் கருவிக்கு அருகாமையில் இருப்பதால் வெப்பச் சம்பவத்தை விளைவிக்கலாம் என புரோட்டான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாதுகாப்பு நடவடிக்கையாக, அனைத்து புரோட்டோன் X90 உரிமையாளர்களையும் தங்களது வாகனங்களைப் பரிசோதிப்பதற்கு அல்லது ஆய்வுக்கு கார்களை கொண்டுவரும்படி தனித்தனியாக புரோட்டோன் விநியோகிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படலாம். தேவைப்பட்டால், வெப்ப அபாயத்தை அகற்ற சர்வீஸ் சென்டரால் தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
புரோட்டான் X90 இன் உரிமையாளர்கள் தங்கள் அருகில் உள்ள சேவை மையத்தைத் தொடர்புகொண்டு இது தொடர்பான சந்திப்புக்கு திட்டமிடலாம் அல்லது கூடுதல் விவரங்களுக்குப் புரோட்டோனின் ஹெல்ப்லைன் 1-800-88-8398 தொடர்புகொள்ளலாம். இதற்கிடையில், புரோட்டோன் X 90 இல் பயன்படுத்தப்படும் லேசான கலப்பின 48-வோல்ட் பேட்டரியுடன் இந்த சம்பவம் தொடர்புடையது அல்ல என்று புரோட்டோன் வலியுறுத்தியது.