Latestமலேசியா

புற்றுநோய் விழிப்புணர்வு மலேசியர்களிடையே குறைவாக உள்ளது – கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர், மார்ச் 12 – புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மலேசியர்களிடையே மிகவும் குறைவாக உள்ளது. இதனால் அந்நோய் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையை எட்டிய பிறகுதான் பலர் தாமதமாக சிகிச்சைக்கு வருகின்றனர் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

புற்றுநோய் இருக்கிறது என்பதை நாம் முன்கூட்டியே கண்டுப்பிடித்துவிட்டால் அதற்கான சிகிச்சையை விரைந்து மேற்கொள்ள முடியும். அதோடு அந்த நோயை கட்டுப்படுத்தவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

புற்றுநோய்க்கு தாமதமாக சிகிச்சை மேற்கொள்வதுதான் மிகப்பெரிய பிரச்சனை. எனவே பொதுமக்களிடையே புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரிடையே ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!