இஸ்லாமாபாத், அக்டோபர்-7 – பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம் ஒருவர், கழுத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட புலியின் மீது ஏறி அமர்ந்து சவாரி செய்யும் வீடியோ, அந்நாட்டு வலைத்தளவாசிகள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nouman Hassan எனும் அவ்விளைஞர் தனது Instagram-மில் அண்மையில் அவ்வீடியோவைப் பதிவுச் செய்தார்.
ஒரு திறந்த வெளியில் புலியின் மீது அவ்வாடவர் அமர்ந்திருப்பது அவ்வீடிவோவில் தெரிகிறது.
வீடியோவின் பின்புலத்தைப் பார்க்கும் போது, இரு கூண்டுகள் இருக்கின்றன.
ஒன்றில் ஆண் சிங்கமும் மற்றொன்றில் பெண் சிங்கமும் உள்ளன.
உங்களின் பொழுதுப் போக்குக்காக விலங்குகளை இப்படித்தான் இரக்கமில்லாமல் நடத்துவீர்களா என வலைத்தளவாசிகள் கேட்கின்றனர்.
அதுவும் கழுத்தில் சங்கிலியைக் கட்டியுள்ளீர்; அந்த புலி பார்க்கவே பலவீனமாக இருப்பதாக சிலர் கவலைத் தெரிவித்தனர்.
புலிகள், சிறுத்தைகள், பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை Nouman தனது தோட்டத்தில் வளர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பது குறிப்பாக பணக்காரர்கள் மத்தியில் அண்மையக் காலமாகவே பிரபலமாகி வருகிறது.