கோலாலம்பூர் , பிப் 3 – புலியைப் போன்று சாயம் பூசப்பட்டிருக்கும் நாய் ஒன்று காணப்படும் புகைப்படத்தை வெளியிட்டதாக கூறப்படுவதை பெர்னாமா செய்தி நிறுவனம் மறுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட படம் பழையது எனவும், 2020 -இல் அதுபோன்ற படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது தெரிய வந்ததாக, அந்த ஊடகத்தின் தலைமை செய்தி ஆசிரியர் Khairdzir Yunus தெரிவித்தார்.
முன்னதாக, புலியைப் போன்று தனது நாயிற்கு சாயம் பூசி, அதனை சீனப் புத்தாண்டுக்கு முதல் நாள் வெளியில் திரிய வைத்து, மக்களை பயமுறுத்த செய்திருக்கும் இளைஞனை, போலீஸ் தேடி வருவதாக குறிப்பிடும் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது.