Latestமலேசியா

புலியை வேட்டையாட மூன்று பொறிகள்

தானா மேரா, மார்ச் 28 – கிளந்தானில் தானா மேராவில் Kampung Perala பகுதியில் ரப்பர் சிறு தோட்டக்காரர்களுக்கும் அவர்களது கால்நடைகளுக்கும் பெரும் மிரட்டலாக இருந்துவரும் புலியை பிடிப்பதற்காக மூன்று பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன் பூங்கா மற்றும் வன விலங்குத்துறையான பெர்ஹிலித்தான் அதிகாரிகள் புலியை வேட்டையாடுவதற்காக அந்த பொறிகளை வைத்தனர்.

Kampung Perala பகுதியில் நடமாடிவரும் புலியினால் அங்குள்ள மக்கள் வேலைக்கு செல்வதற்கும் அஞ்சுகின்றனர். இதுவரை குடியானவர் ஒருவருக்கு சொந்தமான ஆறு மாடுகளை புலி அடித்துக் கொன்றுள்ளது. இதனால் அந்த குடியானவருக்கு 15,000 ரிங்கிட் இழப்புக்கு உள்ளானார். தொடக்கத்தில் ஒரு பொறி மட்டுமே வைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்த மேலும் இரண்டு பொறிகள் வைக்கப்பட்டதாக கிளந்தான் பெர்ஹிலித்தான் இயக்குனர் Mohamad Hafid கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!