Latestமலேசியா

எவரெஸ்ட் சிகரத்தை விட பெரிதான வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருகிறது; நாசா தகவல்

வாஷிங்டன், ஜனவரி 11 – எவரெஸ்ட் சிகரத்தை காட்டிலும் பெரிதான வால் நட்சத்திரம் ஒன்று தற்போது பூமியை நெருங்கி வந்து கொண்டிருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) கூறியுள்ளது.

12P/Pons-Brooks எனும் அந்த வால் நட்சத்திரம், இராட்சத வால் நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.

அதன் வடிவம் கொம்பு போல இருப்பதால், அது அவ்வாறு அழைக்கப்படுகிறது.

இவ்வாண்டு ஜூன் இரண்டாம் தேதி, அந்த இராட்சத வால் நட்சத்திரம், பூமிக்கு மிக அருகில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், சாதாரணமாகவே அதனை பார்க்க முடியுமென, வானிலை நிபுணர்கள் நம்புகின்றனர்.

அந்த வால் நட்சத்திரம், பூமியை மிக அருகில் கடந்து சென்றாலும், அது சூரியனிலிருந்து வெகு தொலைவில் தான் இருக்கும்.

இவ்வேளையில், அந்த வால் நட்சத்திரம், பூமியை மோதும் பாதையில் இல்லை என்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. அதனால், ஒரு பெரிய மோதல் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவும் எனவும் நாசா கூறியுள்ளது.

உண்மையில், அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு, பெரிய பொருட்கள் எதுவும் பூமியை தாக்கும் சாத்தியம் இல்லை எனவே கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!