
ஈப்போ, நவம்பர் 1 – புலியின் நடமாட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து, பேராக், கம்பார், கம்போங் சஹோம் மற்றும் சுங்கை சிபுட், போஸ் குவாலா மூ கிராமங்களை சேர்ந்த மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்விரு பகுதிகளிலும், புலி நடமாட்டம் இருப்பதை, PERHILITAN – பேராம் மாநில தேசிய பூங்கா – வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, பூர்வக்குடி மக்கள் வசிக்கும் கம்போங் மூ கிராமம், புலி நடமாட்டம் அதிகம் தென்படும், பியா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்திருப்பதை, பேராக் மாநில PERHILITAN இயக்குனர் யூசோப் ஷாரிப் சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், கம்போங் சஹோ கிராமமும், சாலு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
ஆப்பிரிக்க பன்றி சளிக்காய்ச்சல் காரணமாக, காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், உணவு தேடி புலிகள் மக்கள் வசிம்கும் பகுதிகளுக்குள் நுழையத் தொடங்கியுள்ளதாகவும் யூசோப் சொன்னார்.
அவற்றின் நடமாட்டத்தை அடையாளம் காண, அவ்வொரு கிராமங்களிலும், கேமிராக்களும், பொறிகளும் பொருத்தப்பட்டிருப்பதையும், யூசோப் சுட்டிக் காட்டினார்.
அதனால், அந்த கொடிய விலக்கை காண நேர்ந்தால், சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, குவாலா மூ பகுதியில், சாலைக்கு அருகே புலி சுற்றித் திரியும் ஏழு வினாடி காணொளி ஒன்று வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.