Latestஇந்தியாசினிமா

புல்லினங்கால், சிம்டாங்காரன் பாடல்களை பாடிய பம்பா பாக்யா திடீர் மரணம்

சென்னை, செப் 2 – எந்திரன் 2.0 படத்தின் ‘புள்ளினங்கால்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே காலமே ‘, என பல ஹிட் பாடல்களைப் பாடியவரான பம்பா பாக்யாவின் திடீர் மரணம் பலரை அதிர்ச்சிகுள்ளாக்கியிருக்கிறது. அவருக்கு வயது 49.

ஏ. ஆர். ரஹமானின் விருப்பமான பாடகர்களில் ஒருவராக திகழ்ந்த பம்பா பாக்யா, மணிரத்தினத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பாடலின் ஆரம்ப வரிகளைப் பாடியிருந்தார்.

நேற்று திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இவரது திடீர் மறைவை அடுத்து, திரையுலகத்தினரும் ஊடகப் பிரபலங்களும், ரசிகர்களும் அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!