Latestமலேசியா

புல் வெட்டும் இயந்திரத்தை கொண்டு தாக்கிய பெண்ணும், காயமடைந்தவரும் சமாதானம் செய்துக் கொள்ள இணக்கம்

கூலிம், செப் 23 – கெடா, கூலிமில், புல் வெட்டும் இயந்திரத்தை கொண்டு, அண்டை வீட்டுக்காரரின் தலையில் காயத்தை ஏற்படுத்திய பெண் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மாறாக, சம்பந்தப்பட்ட பெண்ணும், அச்சம்பவத்தில் காயமடைந்தவரும் சமாதானம் செய்துக் கொள்ளவும் முன் வந்துள்ளனர்.

நேற்று முன்தினம், தலையில் இரத்த காயத்திற்கு இலக்கான 60 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர், பெண் ஒருவருடன் சண்டையிடும் காட்சி அடங்கிய ஒரு நிமிடம் 29 வினாடி காணொளி பரவலாக பகிரப்பட்டது. அதே நாளன்று, மாலை மணி மூன்று வாக்கில், அண்டை வீட்டாரிடையே ஏற்பட்ட மோதலின் போது, புல் வெட்டும் இயந்திரம் பட்டு சம்பந்தப்பட்ட ஆடவர் காயமடைந்தார்.

முன்னதாக, தங்கள் வீட்டின் முன் குப்பைகளை கொண்டுவது, காரை நிறுத்தி வைப்பது ஆகிய காரணங்களால் சண்டை மூண்டதாக, காயமடைந்த நபர் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அது குறித்து அண்டை வீட்டாரிடம் நேரடியாக அவர் கூறியுள்ளார்.

அதனால் அதிருப்தி அடைந்த சம்பந்தப்பட்ட பெண் தம்மை திட்டியதால், அவரை தாம் கீழே தள்ளிவிட்டதாக சம்பந்தப்பட்ட நபர் கூறினார். கீழே விழுந்த அப்பெண், அங்கிருந்த புல் வெட்டும் இயந்திரத்தை கொண்டு அவ்வாடவரை தாக்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!