Latestஇந்தியாஉலகம்

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கடத்தப்பட்டு கற்பழித்து கொலை

புதுடில்லி, ஆக 17 – இந்தியாவில் அர்யானா மாநிலத்தில் வீட்டிற்கு அருகேயுள்ள விளையாட்டுப் பூங்காவில் தமது இரண்டு வயதுடைய சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டு , கற்பழிக்கப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார். மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை  ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். பணிபட் என்ற இடத்தில் வசித்து வந்த அந்த ஆடவன் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவன் என போலீசார் தெரிவித்தனர். சவ பரிசோதனைக்குப் பின்னர் அந்த சிறுமியின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட பின் அந்த சிறுமி கழுத்து நெரித்து கற்பழிக்கப்பட்டதாக சவ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!