கோத்தா இஸ்கண்டார், ஆகஸ்ட் -21, சிங்கப்பூரிலிருந்து இந்நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 2,160 கிலோ கிராம் எடையிலான நீண்ட முட்டைக்கோஸ் (Kobis panjang) பூச்சிகள் மற்றும் சிறு வண்டுகளால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து அவற்றை ஏற்றி வந்த லாரியை சோதனையிட்ட போது அது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
216 பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட அந்த நீண்ட முட்டைக்கோசுகளின் மதிப்பு 6,800 ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் பூச்சுகளும் வண்டுகளும் மொய்த்துக் கொண்டிருந்ததால், அதிகாரிகள் லாரியை ஜோகூருக்குள் நுழைய விடாமல் சிங்கப்பூருக்கே திருப்பியனுப்பினர்.
பூச்சிகள், நோய்கள் மற்றும் நச்சுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயப் விளைப் பொருட்களை இறக்குமதி செய்து சட்டப்படி குற்றமாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 1 லட்சம் ரிங்கிட் அபராதமும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர்.