Latestமலேசியா

பூச்செடி , கார் நிறுத்துமிடப் பிரச்சனையால் அண்டை வீட்டார் இடையே சண்டை

ஷா ஆலாம், ஜூன் 13 – பூச்செடி மற்றும் வாகன நிறுத்துமிடப் பிரச்சனையால், அண்டை வீட்டார் சண்டையிட்டுக் கொண்ட காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த  சம்பவம் ஷா ஆலாம், செக்‌ஷன் 24 –இல் உள்ள வீடமைப்புப் பகுதியில், நேற்று மாலை மணி மூன்றளவில் நிகழ்ந்தததாக கூறப்படுகிறது.

அந்த சம்பவம்  தொடர்பில், சண்டையிட்டுக் கொண்ட இரு தரப்புகள்  இடமிருந்து போலீஸ்  புகார்கள் பெறப்பட்டதாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் பஹாரூடின் மட் தாய்ப் தெரிவித்தார்.

அவ்விரு தரப்பையும் அழைத்து போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.  பின்னர் அவ்விரு தரப்பினரும் சமாதானமாகி செல்ல இணங்கினர். அத்துடன்  போலீஸ் புகாரையும் மீட்டுக் கொண்டனர்.

புகார் மீட்டுக் கொள்ளப்பட்டாலும், போலீசார் விசாரணையைத் தொடர்வதாக  பஹாரூடின் மட் தாய்ப் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!