செப்பாங், ஆக 7 – தனது 12 வயது மகன் புரோடுவா விவா கார் ஓட்டிய விவகாரத்தில் அச்சிறுவன் காயம் ஏற்படும் சாத்தியத்தை கண்காணிக்கத் தவறியது அல்லது அலட்சியமாக இருந்ததாக அச்சிறுவனின் தந்தையான பாகிஸ்தான் பிரஜை மீது குற்றஞ்சாட்டப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்றதில் நீதிபதி அகமட் புவாட் ஒத்மான் (Ahmad Fuad Othman) முன்னிலையில் இன்று குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது மலேசியாவின் நிரந்தர குடியிருப்பு கார்டு வைத்திருந்த 53 நபர் அதனை மறுத்தார். கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி பூச்சோங், தாமான் புத்ரா இம்பியானாவில் ( Taman Putra Impiana) இரவு மணி 7.30 அளவில் அக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை மேற்போகாத சிறை தண்டனை அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம். அண்மையில் தனது இரண்டு உடன்பிறப்புக்களுடன் அந்த சிறுவன் புரோடுவா விவா கார் ஓட்டியதை பெண் ஒருவர் தடுத்து நிறுத்தும் 1 நிமிடம் 49 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த ஆடவருக்கு 8,000 ரிங்கிட் ஜாமின் வழங்கப்பட்டதோடு அந்த நபருக்கு எதிரன குற்றச்சாட்டு செப்டம்பர் 4ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.