பூச்சோங், ஆகஸ்ட்-14 – சிலாங்கூர், பூச்சோங்கில் தேவாலயத்தில் வைத்து 13 வயது சிறுவனைப் பாலியல் துன்புறுத்தல் செய்த சந்தேகத்தின் பேரில் பாதிரியார் கைதாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பூச்சோங்கிலுள்ள ஓர் உணவகத்தில் 27 வயது அந்நபர் கைதானார்.
விசாரணைக்காக அவ்வாடவர் தடுத்து வைக்கப்படுவார் என சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் பண்டார் புக்கிட் பூச்சோங்கில் உள்ள தேவாலயத்தின் படுக்கையறையில் வைத்து சந்தேக நபர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக புகார்தாரர் போலீசில் புகார் செய்துள்ளார்.
2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.