
செர்டாங், மே 16 – பூச்சோங், பண்டார் கின்ராராவில் கடந்த வியாழக்கிழமையன்று ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். 30 முதல் 40 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் விசாரணைக்கு உதவும் பொருட்டு இம்மாதம் 18ஆம் தேதிவரை ல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் Hussein Omar Khan தெரிவித்தார். அந்த சம்பவத்தை ஒரு படுகொலை என வருணித்த அவர் குண்டர் கும்பல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையே இதற்கு காரணம் என அவர் வர்ணித்தார். சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 31 வயது நபர் குண்டர் கும்பல் மற்றும் பல்வேறு குற்றச் செயல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது என
Hussein கூறினார்.