
பெட்டாலிங் ஜெயா , ஜன 29 – பூச்சோங் பெர்டானாவில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் – ஸ்ரீ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆலய தலைவர் டத்தோ பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ம.இகா தேசிய உதவி தலைவர் டத்தோ டி.மோகன் – டத்தின் லோகேஸ்வரி தம்பதியர், மனித வள அமைச்சர் சிவக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்கு குழு உறுப்பினர் கணபதி ராவ் , கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஹி ஹான் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். காலை மணி 6.45 மேல் காலை 8 மணிவரை கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுந்தர விமான கோபுர கலசங்கள், மகா கும்பாபிஷேக பரிவார மூர்த்திகளுடன் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக பூஜைகள் ஆகம முறைப்படி நடைபெற்றது. அதனை தொடர்ந்து விசேஷ பூஜைகளும் அர்ச்சனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேக த்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகமும் நடைபெற்று வருவதால் பக்தர்கள் அந்த நிகழ்விலும் கலந்துகொள்ள வேண்டுமென ஆலய தலைவர் டத்தோ பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டார். இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் , உதவி வழங்கிய நல்ல உள்ளங்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் ஆலக நிர்வாகத்தினர் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.