Latestமலேசியா

ECRL; தென்கிழக்காசியாவில் 4G தொடர்பு வலையமைப்பை கொண்ட முதல் திட்டமாக திகழ்கிறது

கோலாலம்பூர், டிசம்பர் 1 – 665 கிலோமீட்டர் நீளமுள்ள, ECRL – கிழக்குகரை இணைப்பு பயணிகள் இரயிலில், 4G இணையச் சேவையை பயன்படுத்தி, LTE-Railway தொடர்பு வலையமைப்பைச் செயல்படுத்திய முதல் தென்கிழக்காசிய நாடாக மலேசியா வரலாறு படைக்க உள்ளது.

அந்த தொடர்ப்பு முறை, 4G சேவையை பயன்படுத்தி அமைக்கப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் அதனை 5G சேவைக்கு மேம்படுத்த விரும்பினால், அதற்கான உள்கட்டமைப்பு தயார் நிலையில் இருக்கும், மென்பொருளை மட்டும் புதுப்பித்தால் போதுமானது என MRL – மலேசிய ரேல் லிங் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

அந்த இணையச் சேவையை பயன்படுத்தி பயணிகள் படங்களை பார்க்கலாம். சுரங்கப்பாதைகள் வழியாக செல்வது உட்பட பயணம் நெடுகிலும் அவர்கள் இணைய இணைப்பை அனுபவிக்கலாம். அதற்காக, இணைய சேவை வழங்குனர்களுடனும் நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுவதாக டார்விஸ் சொன்னார்.

மணிக்கு அதிகபட்சம் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்ட, ECRL – கிழக்குகரை இரயில் திட்டம், 2026-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் வரையில், 40 சுரங்கங்களில் 25 சுரங்கள் உட்பட அதன் 54 விழுக்காட்டு நிர்மாணிப்பு பணிகள் முழுமைப்பெற்றுள்ளன.

கெபெங்கிலுள்ள, குவாந்தான் போர்ட் சிட்டி நிலையத்திற்கும், திரங்கானு டுங்கூன் நிலையத்திற்கும் இடையிலான, முதல் தடம் அமைக்கும் பணியை, டிசம்பர் 11-ஆம் தேதி, பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்பதையும் டார்விஸ் உறுதிப்படுத்தினார்.

ECRL சேவைக்கான டிக்கெட் கட்டணம், 2026-ஆம் ஆண்டு வாக்கில், APAD – பொது போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியை பெற்றப் பின்னர் அறிவிக்கப்படும்.

இதனிடையே, வனவிலங்கு மற்றும் சுற்றுசூழலைப் பாதுகாக்கும் முயற்சியாக, 27 வனவிலங்கு குறுக்குவழிகள், பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் கட்டப்பட்டுள்ளதையும்
டார்விஸ் சுட்டிக்காட்டினார்.

கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையிலான ECRL திட்டம், 2026 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நிறைவடையுமென எதிர்ப்பார்க்கப்படும் வேளை ; கோம்பாக் முதல் போர்ட் கிள்ளான் வரையிலான திட்டம் 2027-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி முழுமைப்பெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!