பூச்சோங், அக்டோபர்-18, சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள பிரபல உணவு நிலையத்தில் (food court) சிகரெட் பிடித்ததால் கண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர், அந்நிலைய நிர்வாகியை கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.
26 வினாடி அவ்வீடியோவில், இரு ஆடவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ஒரு பெண் அவர்களை விலக்கி விட முயல்வதும் தெரிகிறது.
வாக்குவாதத்தின் போது அந்த வாடிக்கையாளர் திடீரென கால்சட்டைக்குள் கையை விட்டு துப்பாக்கியை ஒத்திருக்கும் ஒரு பொருளை எடுத்துக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிகரெட் பிடித்ததை food court நிர்வாகி கண்டித்ததால் சினமடைந்து அவ்வாடவர் அவ்வாறு நடந்துகொண்டதாக வைரலான வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.
அச்சம்பவம் குறித்து புகாரேதும் பெறப்படவில்லை எனக் கூறிய சிலாங்கூர் போலீஸ், நேரில் பார்த்த சாட்சிகள் முன்வந்து புகாரளிக்குமாறு கேட்டுக் கொண்டது.