
நீலாய், ஜன 16 – நெகிரி செம்பிலான், நீலாய் , Taman Desa Jasmin- னில் வேலியின் மீது ஏறி குதித்து, பூட்டப்படாத வீட்டுக்குள் நுழைந்து , 30,000 ரிங்கிட் வரை கொள்ளையிட்டுச் சென்றனர் நான்கு உள்நாட்டு ஆடவர்கள்.
அதிகாலையில் நிகழ்ந்த அந்த கொள்ளையில், திருடர்கள், வீட்டிலிருந்தவர்களை, பாராங் கத்தியைக் காட்டி மிரட்டு , கொள்ளையிட்டுச் சென்றதாக, நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Superitendan Abdul Malik Hasim தெரிவித்தார்.
கொள்ளையிட்டப் பின்னர், Proton Waja காரில் தப்பிச் சென்ற அந்த கொள்ளையர்களை, தேடிப் பிடிக்கும் துரித நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அவர் கூறினார்.