
பெட்டாலிங் ஜெயா, ஆக 25 – பூட்டப்பட்ட காரில், 40 நிமிடங்களாக சூடு தாங்காமல், சுவாசிக்க சிரமப்பட்ட குழந்தை ஒன்று மொதுமக்களால் காப்பாற்றப்பட்டது.
நேற்று X தளத்தில் வைரலான காணொளியில், குழந்தை ஒன்று அழுந்தவாரே மிக சோர்வான நிலையில், காரினுள் அவதியுறும் காட்சியும், சுற்றி பொதுமக்கள் அக்குழந்தையை காப்பாற்ற முயலும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. ‘
பெற்றோர் யார், எங்குச் சென்றார்கள் என்று தெரியாத சூழலில், பொதுமக்கள் வேறு வழியின்றி கார் கண்ணாடியை உடைத்து அக்குழந்தையை காப்பாற்றி அருகில் இருந்த கிளினிக் ஒன்றிற்கு அழைத்து சென்றதாக நம்பப்படுகிறது.
வைரலான அக்காணொளியின் கீழ், அக்குழந்தையின் பெற்றோர் எப்போது வந்தார்கள், அக்குழந்தைக்கு என்னவாயிற்று என பல வலைத்தளவாசிகள் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள அந்த காணொளியை பதிவேற்றம் செய்த அரிவ் எனும் நபர், குழந்தை காப்பாற்றப்பட்டு கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் தான் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், பெற்றோர்கள் குறித்த விவரம் தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.இச்சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியவில்லை.