
மும்பை, செப் 5 – பூட்டப்பட்ட வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் 25 வயது விமான பணிப்பெண் ஒருவர். இச்சம்பவம் மும்மையில் உள்ள அந்தேறி எனும் இடத்தில் நிகழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 40 வயது துப்புறவு பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளான். அவனுடன் சேர்த்து அவனது மனைவியும் கைதாகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், அப்பெண்ணைத் தொடர்புக் கொள்ள முடியாததை அடுத்து,அவரது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களை அழைத்துள்ளனர்.
பின்னர் நண்பர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருக்கவே, போலிசாரின் உதவியிடன் வீடு திறக்கப்பட்டது.
அப்போதுதான், அப்பெண் இறந்து கிடந்துள்ளார்.
அந்த வீட்டிற்கு இவ்வருட தொடக்கத்தில் வந்த அப்பெண், அங்கு தனது அக்கா மற்றும் அக்காவின் காதலன் என மூவர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.