
சிரம்பான்,மார்ச் 13 – இறந்து 3 தினங்கள் ஆகிவிட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் உடல் பூட்டிய காருக்குள் கண்டெடுக்கப்பட்டது.
43 வயதான அந்த ஆடவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதை தொடர்ந்து ,அவரைத் தேடிச் சென்ற நண்பருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
சிரம்பான் 2, Gardens Homes கார் நிறுத்துமிடப் பகுதியில் , பூட்டிய காருக்குள் சுயநினைவற்ற நிலையில் ஆடவர் ஒருவர் இருப்பதாக, தங்களுக்கு அழைப்பு வந்ததாக, தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவின் தலைவர் Mohamad Kamal Mohd Kimar தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து காரின் கதவைத் திறந்த தீயணைப்பு வீரர்கள் , அந்த ஆடவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்ததாக அவர் கூறினார்.