மலாக்கா, ஏப் 21 – பூனையின் மலம் இருந்ததை அடுத்து, மலாக்கா ஜாசினில் உள்ள சூப்பர்மார்க்கெட்டின் பொருள் கிடங்கை 14 நாட்களுக்கு மூடும்படி மாநில சுகாதார துறை உத்தரவு பிறப்பித்தது.
பூனையின் மலம், டாக்ஸோபிளாஸ்மோசிஸ் (toxoplasmosis) எனும் ஒட்டுண்ணியின் மூலம் பரவக் கூடிய தொற்றினை ஏற்படுத்துமென , மலாக்கா மாநில சுகாதார போதைப்பொருள் தடுப்பு செயற்குழுவின் தலைவர் Dr. Muhamad Akmal Saleh தெரிவித்தார்.
அத்துடன், உணவுப் பொருளின் சுகாதாரத்தை பேணத் தவறியதற்காக அந்த சூப்பர்மார்க்கெட்டிற்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.