Latestமலேசியா

பூனையை சுட்டுக்கொன்ற முன்னாள் போலீஸ்காரருக்கு ரி.ம 6, 500 அபராதம்

கோலாலம்பூர். ஏப் 5 – ஆசையோடு வளர்த்த கோழிக்குஞ்சை பூனை கடித்து உட்கொண்டதை தாங்க முடியாமல் அதனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது மற்றும் பொது இடத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய இரு குற்றங்களுக்காக முன்னாள் போலீஸ்காரர் ஒருவருக்கு செலயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6,500 ரிங்கிட் அபராதம் விதித்தது. தம்மீதான குற்றச்சாட்டை 65 வயதுடைய Zainol Abidin Md Zain ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 5,000 ரிங்கிட் அபராதமூம் அதனை செலுத்தத் தவறினால் ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

மேலும் பொது இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்ததற்காக 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை செலுத்தத் தவறினால் இரண்டு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கும்படியும் Zainol Abidin னுக்கு பணிக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மாலை மணி 6.40 அளவில் Selangor, Kuang கிலுள்ள Kampung Setia விலுள்ள தமது தோட்டத்தில் வேட்டை துப்பாக்கியின் மூலம் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!