
மலாக்கா, ஆக 28 – முன்ச்கின் (Munchkin) அல்லது சோசேச் (Sausage) ரக பூனை விற்பனையில் மலாக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 38,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு 23ஆம் திகதி முகநூலில் சம்பந்தப்பட்ட பூனை விற்பனை குறித்த விளம்பரத்தைப் பார்த்த அந்த ஆசிரியர் உடனே விளம்பரதாரரை தொடர்புக் கொண்டுள்ளார்.
பின்னர் அப்பூனையை 600 ரிங்கிட்டிற்கு வாங்க சம்மதம் தெரிவித்து 300 ரிங்கிட் முன் பணத்தையும் செலுத்தியிருகின்றார்.
அதன் பின்னர் இந்த ரக பூனையை வளர்க்க வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காவின் சிறப்பு பெர்மிட் தேவை என்றும், கார்கோ வழி அப்பூனையை அனுப்பும் சேவைக்கான கட்டணத்தையும் அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிபந்தனை வரவே, ஜகார்தாவிலிருந்து வரவிருந்த அப்பூனைக்காக மொத்தம் 38,000 ரிங்கிட் வரை ஆக 24 முதல் ஆக 28 வரை செலுத்தியிருக்கின்றார் அப்பெண்.
கேட்ட எல்ல பணத்தையும் கொடுத்த பிற்கே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் போலிசில் புகார் செய்திருக்கின்றார்.மலாக்கா போலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.