
கேப் கேனவரல் , ஜன 26 –Truck வாகனம் அளவுள்ள சிறுகோள் ஒன்று இன்றிரவு பூமியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதிவுச் செய்யப்பட்ட மிக நெருக்கமான சந்திப்புகளில் ஒன்றாக அது இருக்குமெனவும்
அது பூமியை தாக்கும் சாத்தியம் இல்லை எனவும் NASA கூறியிருக்கிறது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த சிறுகோள், தென் அமெரிக்காவின் தெற்கு முனையிலிருந்து, மூவாயிரத்து 600 கிலோமீட்டர் உயரத்தில் கடந்து செல்லவிருக்கிறது.
பூமியை சுற்றி வட்டமிடும் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை காட்டிலும், அது பத்து படங்கு நெருக்கமான தூரமாகும்.