
பூமியின், Stratosphere அடுக்கு மண்டலத்தின் ஒலிகளைப் பதிவுச் செய்ய, இராட்சத சூரிய பலூன்கள், விண்ணில் 70 ஆயிரம் அடி உயரத்திற்கு அனுப்பப்பட்டன.
அதில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோபோன்கள், சில எதிர்பாராத சத்தங்களை பதிவுச் செய்துள்ளதாக, நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ட்ராடோஸ்பியர் (Stratosphere) என்பது பூமியின் வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கு ஆகும். அதன் கீழ் மட்டத்தில் தான் ஓசோன் உள்ளது. ஓசோன் சூரியனின் புற ஊதா கதிர்வீச்சை தடுக்கும் பகுதியாக உள்ளது.
ஜெட் விமானங்களும், வானிலை பலூன்களும், Stratosphere-ரின் மெல்லிய, வறண்ட காற்று பகுதியில் அவற்றின் அதிகபட்ச உயரத்தை அடைகின்றன.
அந்த அடுக்கு மண்டலத்தில் முதல் முறையாக, ஒலிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், தெளிவில்லாத மர்மமான ஒலிகளை பதிவுச் செய்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அண்டார்டிகாவை வட்டமிட்ட சூரிய பலூனில், கடல் அலைகள் மோதும் சத்தம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதோடு, அது தொடர்ச்சியான பெருமூச்சு போல ஒலிக்கிறது. எனினும் இதர சத்தகங்களை அடையாளம் காண முடியவில்லை என கூறப்படுகிறது.