Latestஉலகம்

பூமியின் அழகைப் பார்த்தபடி மதுவும் உணவும்; கட்டணம் வெறும் 1 மில்லியன் ரிங்கிட்தான்

பிரான்ஸ், மே 14 – பசிக்காக உணவருந்தி பின்னர் ருசிக்காக உணவருந்திய காலம் மாறி இப்பொழுது பொழுதுபோக்குக்காக உணவருந்தும் காலம் இது.

அதனாலேயே, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறான உணவருந்தும் அனுபவத்தை உணவகங்கள் வழங்கி வருகின்றன.

அந்த வகையில், இப்போது பூமியில் உணவருந்தி சளித்த விட்ட மனிதருக்கு பூமியின் அழகை ரசித்தவாறு விண்ணலுகிலிருந்து உணவருந்தும் அனுபவத்தை வெறும் 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு ஏற்படுத்தி தரவுள்ளது பிரான்ஸ் நாட்டு Zephalto எனும் சுற்றுலா நிறுவனம் ஒன்று.

பூமிக்கு மேல், 25 கி.மீட்டர் உயரத்தில் ஹீலியம் வாயுவுடன் ஒரு சிறிய அறையை இணைத்து அதில் அமந்தவாரு உணவருந்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறவுள்ளனர்.

1 1/2 மணி நேரம் விண்ணுலகிற்கு பயணம், பின்னர் 3 மணி நேரத்திற்கு ஃபிரஞ்சு உணவுடன் மது, அதன் பின்னர் பூமிக்கு வந்துவிடலாம். இதுவே இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ள பயண வசதியாகும்.

இரண்டு விமானிகள், 6 பயணிகளுடன் செல்லக்கூடிய இந்த சுற்றுலாப் பயணத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று முடிந்துவிட்டனவாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!