வாஷிங்டன், ஆகஸ்ட்டு 5 – நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் உள்ள கடல்களில் அலைகள் உருவாகின்றன.
நிலவின் சுழற்சி அடிப்படையிலேயே, நமது நாள்காட்டியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் உயிர்கள் உருவாக அல்லது வாழத் தேவையான சூழ்நிலைகளுக்கு நிலவே காரணமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
எனினும், பூமியை விட்டு நிலவு மெல்ல விலகிச் செல்லும் அதிர்ச்சி தகவலை, விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பூமியை விட்டு நிலவு ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் விலகிச் சென்று கொண்டிருக்கிறது.
நிலவிம் விலகலால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகம் வெகுவாக குறையும்.
பூமி சுழலும் வேகம் குறையும் போது, தற்போது 24 மணி நேரமாக இருக்கும் அதன் ஒரு நாளின் நீலம், மெல்ல அதிகரித்து 25 மணி நேரத்தை எட்டும் என கூறப்படுகிறது.
எனினும், அந்த மாற்றம் சுமார்
200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே நிகழும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி அதி வேகமாக சுழன்றதால், ஒரு நாளின் சுழற்சி 18 மணி நேரமாக இருந்ததாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.