சுங்கை சிப்புட், ஆகஸ்ட் -27 – பேராக், சுங்கை சிப்புட்டில் மாற்றுத்திறனாளியான 10 வயது பூர்வக்குடி சிறுமியை படுகொலைச் செய்த குற்றச்சாட்டின் பேரில், இரத்த உறவான 17 வயது பையன் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
சுங்கை சிப்புட் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், கொலைக் குற்றம் உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், அவனிடம் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30-40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
ஆகஸ்ட் 16-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கும் மாலை 5 மணி வரைக்கும் இடைப்பட்ட காலத்தில், Pos Kuala Mu, Kampung Bersah பூர்வக்குடி கிராமத்தில் அக்குற்றத்தைப் புரிந்ததாக அவன் குற்றம் சாட்டப்பட்டான்.
நான்காமாண்டு மாணவியான நூராய்னா ஹுமாய்ரா ரோஸ்லி (Nuraina Humaira Rosli), காணாமல் போன 24 மணி நேரங்களுக்குப் பிறகு சதுப்பு நிலமொன்றில் இறந்து கிடந்தாள்.
சவப்பரிசோதனையில், சிறுமியின் கழுத்தில் நெரிக்கப்பட்ட காயமும், மர்ம உறுப்பு கிழிந்தும் இருந்தது கண்டறியப்பட்டதாக போலீஸ் முன்னதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது.