
ஜொகூர் பாரு, ஆக 26- Pulai நாடாளுமன்ற தொகுதி மற்றும் Simpang சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை மணி 9 அளவில் தொடங்கியது. Sultan Ibrahim Diamond Junlee மண்டபத்தில் அந்த இரு தொகுதிகளுக்குமான வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்குள் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
காலஞ்சென்ற டத்தோஸ்ரீ Salahuddin Ayub பின் அரசியல் செயலாளராக பணியாற்றியவரும் ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான Suhaizan Kaiat Pulai நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தா ஹரப்பான் சார்பில் போட்டியிடுகிறார். Amanah கட்சியின் சார்பில் போட்டியிடும் அவரை எதிர்த்து Pulai Bersatu கட்சியின் துணைத்தலைவரான Zulkfli Jaafar Perikatan Nasional சார்பில் போட்டியிடவிருக்கிறார்.
Simpang Jeram சட்டமன்ற தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு Amanah துணைத்தலைவர் Bakri Nazri Abdul Rahmanனும் Perikatan Nasional சார்பில் Dr Mohd Mazri Yahya வும் போட்டியிடவிருக்கிறன்றனர். Pulai நாடாளுமன்ற தொகுதி மற்றும் Simpang Jeram சட்டமன்ற உறுப்பினராக இருந்த Salahuddin Ayub அண்மையில் காலமானதை தொடர்ந்து அவ்விரு தொகுதிகளிலும் செப்டம்பர் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.