பத்து காவான் , பிப் 17 – பினாங்கில் Pulau Aman னில் வீசிய புயலினால் மீனவர்களின் படகுகளும் மீன் பிடி சாதனங்களும் சேதம் அடைந்தன. இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீசிய புயலில் மீனவர்களின் படகுகளும் மூழ்கின.
பூலாவ் அமானில் குடியிருக்கும் மக்களின் பல வீடுகளும் சேதம் அடைந்தன. தங்களது வீடுகளின் கூரைகள் ஆட்டம் கண்டதைத் தொடந்து பலர் தூக்கத்திலிருந்து விழித்தனர்.
மழையின் காரணமாக Pulau Aman கடலில் பெருக்கு ஏற்பட்டது. எனினும் அதிகாலை ஒரு மணி முதல் 2.30 மணிவரை அங்கு புயல் ஏற்படும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
இதனிடையே Teluk Kumbar, Balik Pulau ஆகிய இடங்களில் உள்ள மீனவர்களின் படகுகளும் புயலினால் பாதிக்கப்பட்டதாக Bayan Lepas சட்டமன்ற உறுப்பினர் Azrul Mahathir Aziz தெரிவித்தார்.