கோலாலம்பூர், மார்ச் 5 – நாட்டில் பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்ட பூர்வ குடிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ள்ளது . பூர்வ குடிகள் சமூகம் இன்னமும் இரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து செல்லும் வாழ்க்கை முறையினால் அவர்களுக்கு முழுமையான வகையில் தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்த முடியவில்லையென சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார். அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டம் சரியான முறையில் பூர்வகுடி மக்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்துவற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதிவரை பூர்வகுடிகள் சமூகத்தில் 18,161 பெரியோர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதோடு அவர்களில் 196 பேர் மரணம் அடைந்ததையும் கைரி சுட்டிக்காட்டினார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்3 hours ago