Latestமலேசியா

பெக்கானில் 2 கார்கள் மோதிய விபத்தில் பெண் உதவி மருத்துவ அதிகாரி மரணம், எழுவர் காயம்

பெக்கான், டிச 30 – Jalan Kuantan – Segamat சாலையில் 37 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு மணி 8.15அளவில் கடும் மழையின்போது இரு கார்கள் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் மரணம் அடைந்ததோடு இதர எழுவர் காயம் அடைந்தனர். SUV வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள சாலையில் கவிழ்வதற்கு முன் புரோடுவா மைவி காரை மோதியதாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் ஸைடி மாட் ஸின் (Mohd Zaidi Mat Zin ) தெரிவித்தார். அந்த SUV வாகனம் குவந்தானிலிருந்து சிகமாட் சென்றுகொண்டிருந்தபோது விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மைவி காரில் முன்புறம் அமர்ந்திருந்த பெக்கான் Temai சுகாதார கிளினிக்கில் உதவி மருத்துவ அதிகாரியாக பணியாற்றிவந்த 30 வயதுடைய நுர் எஸியாந்தி அலியாக்பர் ( Nur Ezyyantie Aliakbar) விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார்.

அக்காரை ஓட்டிய அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு மகள்கள் காயம் அடைந்தனர், அவர்களில் 12 வயது சிறுமி குவந்தான் Tengku Ampuan Afzan மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் SUV வாகன ஓட்டுனரான 50 வயது ஆடவரும் அவரது மனைவி , 12 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்களும் காயம் அடைந்தனர். 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முகமட் ஸைடி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!