ஜோகூர் பாரு, பிப் 19 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் Bekok தொகுதியில் முன்னாள் ராணுவ வீரர் M. கண்ணன் DAP சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
ரப்பர் தோட்ட தொழிலாளியின் புதல்வரான தாம் கல்வியின் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். வசதியான குடும்பத்திலிருந்து நான் வரவில்லை. நானும் எனது மூன்று சகோதரர்களும் கல்வியில் வெற்றி பெறுவதற்கு என் தாயார் பெரும் பங்காற்றினார் என சிகாமாட்டில் பிறந்து வளர்ந்தவரான கண்ணன் தெரிவித்தார்.
ஒரு பட்டதாரியான அவர் வெற்றி பெற்ற வர்த்தகராக விளங்கி வருகிறார். பெக்கோக் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் நலன் திட்டங்களில் கவனம் செலுத்தபோவதாக கண்ணன் கூறினார். இதற்கு முன் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ். ராமகிருஷ்ணனுக்கு பதில் கண்ணன் நிறுத்தப்படுகிறார் என DAP அறிவித்தது.