Latestஇந்தியா

பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளுக்கு சிறப்பு பூஜை; காணொளி வைரல்

பெங்களூர். டிச 5 – பெங்களூரில் சாலையில் இருக்கும் மோசமான குழிகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியதால் அரசின் கவனத்தை கவர்வதற்காக பொதுமக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர்.

சாலையில் காணப்படும் மூழ்கிய மற்றும் மூடப்படாமல் இருக்கும் குழிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு மாலைகளை போட்டு பூஜை போடும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை குழிக்காக போடப்படும் சிறப்பு பூஜை அரசாங்கத்தின் கவனத்தை கவரத் தொடங்கியது.

அந்த குழிகள் இருக்கும் பகுதியின் அளவிற்கு ஏற்ப மாலைகளை அணிவித்து, ஊதுபத்தி ஏற்றி சிறப்பு பூஜைகளையும் செய்கின்றனர். இந்த பூஜைகள் தொடர்பான காணொளி காட்சிகள் வைரலாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!