
கிளந்தான், பெங்காலான் செப்பா சுகாதார கிளினிக்கில் ஏற்பட்ட தீயில், மூன்று மருத்துவர் அறைகளும், சிகிச்சை அறை ஒன்றும் 80 விழுக்காடு சேதமடைந்தன.
நள்ளிரவு மணி 12 வாக்கில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 53 வயது அப்துல்லா இஸ்மாயில் எனும் பாதுகாவலர், தீ பரவுவதை கண்டு உடனடியாக தீயணைப்பு மீட்பு படைக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
அதோடு, கிளினிக்கின் உட்புறத்திலிருந்து பரவிய தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கவும் முயன்றுள்ளார்.
எனினும், கிளினிக்கின் இரும்புக் கதவு பூட்டப்பட்டிருந்ததால், தம்மால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியவில்லை என அப்துல்லா சொன்னார்.
எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்களின் உதவியோடு, அதிகாலை மணி 2.18 வாக்கில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.