பெங்களூரு, ஏப் 7 – பெங்களுரூவில் 120 அடி உயரம் கொண்ட தேர் கவிழ்ந்ததில் பக்தர்களில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர், பெங்களுரூவிலுள்ள ஆனேகல் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஹஸ்குல் மதுரம்மா ஆலயத்தின் திருவிழா ஊர்வலத்தில் அந்த தேர் சென்றபோது அந்த நிகழ்ச்சியில் அருகேயுள்ள 10 கிராமத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டனர்.
அனைத்து பக்கங்களிலும் கயிறுகளால் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான, நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்ட தேர், பக்தர்கள் இழுக்க முயன்றபோது சமநிலையை இழந்து தரையில் சிக்கிக்கொண்டது.
அந்த தேர் மின் கம்பத்தில் மோதுவதை தவிர்ப்தற்காக அதனை பக்தர்கள் வேகமாக இழுத்தபோது அந்த தேர் கவிழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி வைரலானது.