
கோலாலலம்பூர், மார்ச் 21 – முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான பெஜூவாங் கட்சிக்கான கதவை பெரிக்காத்தான் நேசனல் மூடிவிட்டது. பெரிக்காத்தான் கட்சியில் இணைவதற்காக பெஜூவாங் கட்சி செய்திருந்த விண்ணப்பத்தை நேற்று நடைபெற்ற .
பெரிக்காத்தான் நேசனலின் உச்ச மன்றம் நிராகரித்துவிட்டதாக அக்கட்சியின் தலைமை செயலாளர் ஹம்சா ஜைனுடின் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாநில தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் சின்னத்தில் போட்டியிடும் நோக்கத்தில் அக்கட்சியில் இணைவதற்காக இம்மாத தொடக்கத்தில் பெஜூவாங் விண்ணப்பம் செய்திருந்தது.