
கோலாலம்பூர், ஏப் 22 – இன்று காலை 9 மணிவரை பெட்டாலிங் ஜெயா மாவட்டம் மட்டுமே காற்றின் தூய்மைக் கேடு 110 குறியீடாக ஆகி ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. 64 பகுதிகளில் காற்றின் தூய்மைக்கேடு மிதமாகவும் முன்று மாவட்டங்களில் காற்றின் தூய்மைக்கேடு சிறப்பாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜோகூரில் சிகமாட், கோலாத் திரெங்கானு, லபுவான், சிலாங்கூரில் பந்திங், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கிலும் காற்றின் தூய்மைக்கேடு குறியீடு மிதமான நிலையில் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் இவ்வாண்டு புகை மூட்டப் பிரச்சனை மிகவும் மோசமாக இருக்கும் என அண்மையில் இயற்ககை வளம், சுற்றுச் சூழல், பருவ நிலை மாற்றம் அமைச்சர் Nik Nazmi Nik Ahmad தெரிவித்திருந்தார்.