
கோலாலம்பூர், ஜன 27 – பெட்ரோனாசின் இரண்டு நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் Sulu சுல்தானின் வாரிசுதாரரின் உத்தரவை Luxembourg மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . பிரதமர்துறையின் சட்ட மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு அமைச்சர் Datuk Seri Azalina Othman Said வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்திருக்கிறார். சுலு சுல்தானின் வாரிசு என சொந்தமாக தம்மை பிரகடனப்படுத்திக்கொண்ட ஆடவர் ஒருவர் பெற்றிருந்த அந்த உத்தரவை தள்ளுபடி செய்யும்படி மலேசிய செய்திருந்த முறையீடு மீதான விசாரணை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி Luxemberg மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கியது. அந்த உத்தரவை நீதிமன்றம் ஜனவரி 24 ஆம்தேதி தள்ளுபடி செய்ததன் மூலம் மலேசியாவின் இறையாண்மை மற்றும் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாக Azalina தெரிவித்தார்.