கொழும்பு, மே 24 – இலங்கையின் பொருளாதார நெருக்கடி தற்போது புதிதாக பிறந்த சிசுவுக்கும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தை ஒன்று தாய்ப்பால் அருந்துவது குறைந்ததால் உடல் மஞ்சள் நிறமானது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைந்தது. அக்குழந்தையின் தந்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் தமது ஆட்டோவுக்கு பெட்ரோல் கிடைக்காமல் திண்டாடியதால் அவரால் உடனடியாக அக்குழந்தையை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுச் செல்ல முடியவில்லை. இறுதியில் அக்குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அதன் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு 22mg /dl குறைந்ததால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அக்குழந்தை இறந்தாக பி.பி.சி தகவல் வெளியிட்டது.
Related Articles
Check Also
Close