
பத்து பஹாட், ஜூலை 3 – பெட்ரோல் நிலைய தூணில் லோரி ஒன்று மோதியதில் அதன் ஓட்டுனரும் பெண் உதவியாளரும் காயம் அடைந்தனர். பத்து பஹாட்டிற்கு அருகே Taman Semerah வில் பெட்ரோல் நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேங்காய் ஏற்றியிருந்த அந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிலைய தூணில் மோதியபோது அதன் ஓட்டுனர் இருக்கையிலேயே சிக்கிக் கொண்டார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த Penggaram தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பின் லோரி ஒட்டுனரை மீட்டு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உதவியாளரான 34 வயதுடை பெண் முகம் மற்றும் நெஞ்சில் சொற்ப காயத்திற்கு உள்ளானார்.