ஜோகூர் பாரு, பிப் 18 – ஜோகூர் Bukit Serene அரண்மனையின் அரச வளாகத்தின் முன் பெண்கள் போன்று உடையணிந்து, கண்ணியமற்ற முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்ட 2 ஆடவர்களைப் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
24, 27 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் இன்று மதியம் மணி 12. 30 வாக்கில் கைது செய்யப்பட்டதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ கமாரூல் சாமான் மாமாட் (Datuk Kamarul Zaman Mamat) தெரிவித்தார்.
Bryan Wee’, ‘Deacon Chai’ இருவரின் முகநூல் அகப்பக்க கணக்கில் இருந்து, Bangsa Johor அகப்பக்கத்தில் அந்த ஒழுக்கமற்ற புகைப்படம் மறுபகிர்வு செய்யப்பட்டிருந்தது.
அதையடுத்து, அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார்.